பெருமதிப்புடயீர், நமஸ்காரம்.
நாங்கள் காஞ்சி மகாஸ்வாமிகள் கூறியபடி சிதலமடைந்துள்ள கோவில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வருகிறோம்.
இதுவரை கீழ்கண்ட 9 பழமையான சிவாலயத்தை புனருத்ரானம் செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளோம்.
இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆவுடையார் பாணலிங்கத்தை சுற்றி வட்ட வடிவிலே அமைத்திருக்கின்றனர். ஆவுடையார் என்பது சக்தியை குறிக்கும். இக்கோவில் ஆவுடையார் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆவுடையார் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சிவலிங்கத்தை ரிஷி பிரதிஷ்ட்டையாக ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ஆலய விமானம் கஜப்பிரஷ்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது.
சதுர வடிவ ஆவுடையார் பாணலிங்கதிற்கு அமைந்திருப்பது மிகவும் அபூர்வமாகும். திருத்தணி அருகே ஊற்றெடுத்து திருவள்ளூர்-பொன்னேரி வழியாக வங்கக்கடலில் கலக்கும் குசஸ்தலை ஆற்றோரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் பிரதிஷ்டிக்கப்படுள்ளன. குசமாகிய தர்பையிலிருந்து இந்த நதி உருவானதால் குசஸ்தலை என்று விளங்கப்பெருகின்றது. இந்த ஆற்றின் இரு புறமும் அகஸ்தியரால் அமைத்து, வழிபடப்பெற்ற சிவாலயங்கள் என்பதால், அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய ஆலயங்களில் கர்பக்ரஹத்தில் சதுர வடிவ ஆவுடையாருடன் பாணலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்திற்கு அருகே அமைந்துள்ள சிவத்தலங்கள்
நாங்கள் காஞ்சி மகாஸ்வாமிகள் கூறியபடி சிதலமடைந்துள்ள கோவில்களை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்து வருகிறோம்.
இதுவரை கீழ்கண்ட 9 பழமையான சிவாலயத்தை புனருத்ரானம் செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளோம்.
- மூக்கனூர் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது). சுமார் ஆயிரம் வருடம் தொன்மை வாய்ந்த இந்த சிவாலயம் முசுகுந்த சக்ரவர்த்தியால் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பாண்டவர்கள் வனவாச காலத்தில் ஸ்ரீ சிவகாமி சமேத தாண்டவநேஸ்வரரை பூஜித்து மன அமைதி பெற்றதாக வரலாறு கூறுகிறது.
- மண்ணூர் (பூந்தமல்லியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது)
- நெமிலி (ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 3 கி. மீ. தூரத்தில் அமைந்துள்ளது)
- பாக்கம் (திருவண்ணமலையில் இருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது)
- கண்ணூர்-அரைவாக்கம் (சுங்குவார்சத்திரம்-மப்பேடு செல்லும் சாலையில் உள்ளது)
- அருள்மிகு அபிதகுசாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர், வெண்மணி-போளூர் அருகில் உள்ளது.
- அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருகோயில், சேஷமூலை - திருநள்ளாறு அருகில்.
- அருள்மிகு மாகளநாதர், அம்பர் மாகாளம் - காரைக்கால் அருகில் உள்ளது. (கும்பாபிஷேகம்-யாகசாலை)
- அருள்மிகு ஆனந்தவல்லி சமேத திருநந்தீஸ்வரர், மணவூர் - சென்னை - அரக்கோணம் மார்கத்தில் உள்ளது.
இறைவன் சந்நிதி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆவுடையார் பாணலிங்கத்தை சுற்றி வட்ட வடிவிலே அமைத்திருக்கின்றனர். ஆவுடையார் என்பது சக்தியை குறிக்கும். இக்கோவில் ஆவுடையார் சதுர வடிவில் அமைந்துள்ளது. ஆவுடையார் சதுரமாக அமைக்கப்பட்டிருப்பதால் இந்த சிவலிங்கத்தை ரிஷி பிரதிஷ்ட்டையாக ஆகமங்கள் கூறுகின்றன. இந்த ஆலய விமானம் கஜப்பிரஷ்ட வடிவில் கட்டப்பட்டுள்ளது.
சதுர வடிவ ஆவுடையார் பாணலிங்கதிற்கு அமைந்திருப்பது மிகவும் அபூர்வமாகும். திருத்தணி அருகே ஊற்றெடுத்து திருவள்ளூர்-பொன்னேரி வழியாக வங்கக்கடலில் கலக்கும் குசஸ்தலை ஆற்றோரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிவாலயங்கள் பிரதிஷ்டிக்கப்படுள்ளன. குசமாகிய தர்பையிலிருந்து இந்த நதி உருவானதால் குசஸ்தலை என்று விளங்கப்பெருகின்றது. இந்த ஆற்றின் இரு புறமும் அகஸ்தியரால் அமைத்து, வழிபடப்பெற்ற சிவாலயங்கள் என்பதால், அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றது. இத்தகைய ஆலயங்களில் கர்பக்ரஹத்தில் சதுர வடிவ ஆவுடையாருடன் பாணலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்திற்கு அருகே அமைந்துள்ள சிவத்தலங்கள்
- கண்ணூர் - இறைவன் - ஸ்ரீமுகேஸ்வரர், அம்பாள் - ஸ்ரீமரகதாம்பிகை. கண்ணுவ முனிவர் வழிபட்ட திருத்தலம்.
- கூவம் - இறைவன் - தீண்டாத்திருமேனி திருவிற்கோல நாதர், அம்பாள் - திரிபுரசுந்தரி, ஸ்தலவிருட்சம் - வில்வம், தீர்த்தம் - அக்னி தீர்த்தம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
- மப்பேடு - இறைவன் - சிங்கீஸ்வரர், அம்பாள் - ஸ்ரீ புஷ்பகுஜம்பாள்.
- இலம்பயங்கோட்டூர், சுவாமி - அரம்பேசாம்நாதர், அம்பாள் - கனக குசலாம்பிகை. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
- திருப்பாச்சூர், இறைவன் - பாசூர்நாதர், அம்பாள் - பசுபதி நாயகி, திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற ஸ்தலம்.
- பேரம்பாக்கம், இறைவன் - காசி விஸ்வநாதர்
- அம்மன் சன்னதியிலும், சிவன் சன்னதியிலும் தரை போட வேண்டும்.
- சுவற்றில் கல் பதிக்க வேண்டும் (கர்பக்ரஹம் , அர்த்த மண்டபம்)
- கோவிலுக்கு முன்பாக தரை போட வேண்டும்
- கோவிலை சுற்றி வர நடை பதை அமைக்க வேண்டும்
- கோவிலுக்கு நீர் வரத்து அமைக்க வேண்டும்
இத்திருகொயிலின் கும்பாபிஷேகம் வரும் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தில் 7 ஹோமகுண்டங்கள் அமைத்து 12 சிவாச்சாரியார்களுடன் நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது.
சிவாலய திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் செய்வது என்பது அஸ்வமேத யாகம் செய்வதற்கு ஒப்பாகும். பிறவியின் பயன், இறைவனை உணர்ந்து, இனி ஒரு பிறவி இல்லாமல் இருக்க செய்வது தான். அத்தகைய உயர் பலனை அடைய இறைவன் நம்மக்கு ஒரு வாய்ப்பு அளித்துள்ளார். மேலும் பரமாச்சாரியார் புதியதாக கோவில்களை கட்டுவதைவிட பழைய ஆலயங்களை புதுப்பிப்பது என்பது மிகவும் உயர்வானது என்று கூறுவார். அத்தகைய திருப்பணிகளை செய்பவர்களின் தலைமுறைகள் ஆசீர்வதிக்கப்படுவதாக சான்றோர்கள் கூறுவர் .
எனவே, சிறுதுளி பெருவெள்ளம் என்று கூறுவது போல இந்த எலம்பக்கத்தின் கும்பபிஷேகத்திற்கோ அல்லது ஆலய திருப்பணிக்கோ பொருளதவி செய்து எல்லாம் வல்ல இறைவனின் அருள்பெற வேண்டுகிறோம்.
நமஸ்காரம்.
S. வரதராஜன்
M.V. வாசு

No comments:
Post a Comment
Thank you for your message. We will review your comment and/or feedback and come back to you.